M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்., ஆனால் இது செல்லும் – பல்கலைக்கழக மானியக்குழு

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இருந்து முழுவதும் நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு என யுஜிசி அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி (UGC) தெரிவித்துள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் … Read more

புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி மழலையர் பள்ளிகள் திறப்பு..!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்போக்குதனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருகிறது . கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து … Read more

குஷியோ குஷி…தமிழகம் முழுவதும் இன்று இவர்களுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் இன்று ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் … Read more

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி முதல் … Read more

M.Ed படிப்புக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நாளை முதல் … Read more

7.5% இடஒதுக்கீடு: கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார் முதல்வர். மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அரசு பள்ளி … Read more

CAT 2021: தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

CAT 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் கீழ் காணும் முறைகளை பின்பற்றி விண்ணப்பியுங்கள். CAT 2021 பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை இன்றுடன்(செப்டம்பர் 15) முடிவடைகிறது. CAT 2021 க்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பதாரர்களும் iimcat.ac.in. இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நவம்பர் 28 ஆம் தேதி கேட் 2021 தேர்வை நடத்தும். இந்த தேர்வு 158 நகரங்களில் … Read more

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ்  பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திடவும், சிறு, குறு … Read more

இன்று புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரை…!

தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார். இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த … Read more