அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதமானது, உடனடியாக அதனை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அந்தவகையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி […]