பயனர்களே…வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய வசதி;இதனை எடிட் செய்யலாம்?..!
உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது,வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி இல்லை.ஆனால்,ஒருமுறை அனுப்பப்பட்ட மெசேஜை மட்டுமே நீக்க முடியும் வசதி ஏற்கனவே உள்ளது.இந்நிலையில்,விரைவில் வரவிருக்கும் புதிய அம்சம் மெசேஜை அனுப்பிய பிறகும் அவற்றைத் திருத்துவதை சாத்தியமாக்குகிறது. […]