பிறப்பு மற்றும் இளமை: தாமஸ் ஆல்வ எடிசன் பிப்ரவரிமாதம் 11ஆம் நாள் 1847ஆம் ஆண்டு ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பெற்றோர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். இவரது தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர், இவரது தாயார் நான்சி எடிசன் இவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் […]