சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து தங்களை பேசவிடாத காரணத்தால் அவை நிகழ்வை அதிமுக புறக்கணித்துள்ளது. தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில், அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை […]
அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று தெரிவித்து, இதன்தொடர்பான ஆதாரத்தை வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, செய்தியாளர்களிடம் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி வருகிறது. ஆன் வகையில், கடந்த 1-ம் தேதி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் தொடங்கியது. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசு […]
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் மனைவி ஆனந்தி சைமனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியிடம் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறினார். சைமனின் மகன், மகளின் எதிர்கால நலன் கருது தைரியமாக இருக்க ஆனந்தியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கீழ்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறுஅடக்கம் செய்ய வலியுறுத்தியிருந்தார் ஆனந்தி சைமன் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் […]
தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15 வாரியங்களில் உள்ள 13 லட்சத்து 1,277 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஏப்ரல் 14 ஆம் முடிவடைய இருந்த ஊரடங்கு, இந்த மாதம் 30 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் […]
முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அப்போது தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக இருந்த நிலையில் தற்போது 1,267 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக […]
பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது. இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. நேற்று முன்தினம் மத்திய அமைச்சரும் தமிழக […]