அம்மா அரசின் தொழிற் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி, தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குக என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல்,தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை செம்மையாகப் பயன்படுத்தி தமிழ் நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தமிழக அரசு தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விஷன் 2023: […]
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். மாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பயனடைந்தனர். அதுபோல, இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு […]
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? இல்லையா ? என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும்,தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? இல்லையா ? என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும் போது, […]
16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரை ஏமாற்றமளிக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் இன்று காலை தொடங்கி,நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.உரையில் பல்வேறு திட்டங்கள் பற்றி கூறினார். இந்நிலையில்,ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறுகையில்: திமுக […]
“மத்திய அரசை,மத்திய அரசு என்றே அழைக்கலாம்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன்,அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை போதாது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை […]
கடலூரில்,ஆக்சிஜன் வெண்டிலேட்டரை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக அகற்றியதால் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக, பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் வேதனை அளிக்கிறது,என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,திட்டக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவர் கொரோனா தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால்,கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,கொரோனா நோயாளி ராஜா காலை உணவு அருந்த சென்றபோது,அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் […]
மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ரீல் தான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 31 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி […]
தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் […]