சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பகுதியில் வீக்கம் இருந்தது.பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி , தமிழ்நாடு […]
கள்ளக்குறிச்சி: மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை. அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அடுத்து, தற்போது துறை ரீதியிலான கோரிக்கைகள் மற்றும் விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 20) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி வரையில் காலை – மாலை என இரு வேளைகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் கள்ளக்குறிச்சி […]
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களை நாடினாலும் இதுவரை எந்த பலனும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா – ஆளுநர் ரவி ஒப்புதல் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் […]
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவைகளை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். அதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாகவும், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. திடீரென நிகழ்ந்த அதிமுக – பாஜக கூட்டணி முடிவு குறித்து பல்வேறு […]
சென்னையில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில இடஙக்ளில் […]
விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் .இதையெடுத்து ரயில், விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க கூடாது என மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பல மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து […]
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை வரைவு மீதான கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தேதியை நீட்டிக்கோரி பலரும் கூறி இருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 நாட்கள் நெடிது இன்று மத்திய மனித வள மேம்பாட்டு […]
இன்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் . முதலீடுகளை ஈர்க்க ரூ 60 லட்சம் செலவில் “யாதும் ஊரே” என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும்.கோவையில் ஐ.டி. நிறுவன தேவைக்காக ரூ 200 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படும். ஏற்றுமதிக்காக காஞ்சிபுரம், ஈரோடு சிப்காட்டில் ரூ.50 கோடியில் கட்டமைப்புகள் அமைக்கப்படும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகம். இந்த ஆட்சியில் எந்த நலனும் செய்யவில்லை என தவறான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில், பிரமாண்டமான நவீன கால்நடை ஆராய்ச்சி அமையம் தொடங்கப்பட உள்ளது.சேலம் – செங்கம்பள்ளி சாலை எட்டு வழியாக சாலையாக மாற்றப்பட உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்புகையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திண்டுக்கல் சென்றனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து விட்டு உடனே புறப்பட்டார்.