எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையெட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமி,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதிமுக தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
“அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநரின் அனுமதி பெற்று – தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதற்கு எதிராக, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் , மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு […]