அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐ.டி ரெய்டு என அதிமுக தலைமை கண்டனம். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ஐடி சோதனையால் அதிமுகவினர் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. […]
ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, ‘ஈரோடு புறநகர் மாவட்டம்’ என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ‘ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்’, ‘ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்’ என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் […]
ஒரே நேரத்தில் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சியில் […]
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏமாற்றி வருவதாகவும், வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக மக்களை ஏமாற்றி விட்டது எனவும் குற்றாடியுள்ளார். […]
தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையோடு செலுத்துக என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. திமுக அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. கடந்த 13ம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி […]
விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எம்.ஜி.ஆர். அவர்களால் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும், வாழ்ந்து மறைந்த […]
அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிமுக […]
அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள […]
2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நாம் அனைவரும் ஒருவொருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்றும் தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல, மக்கள் நலனே நமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் […]