காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியின் தவறான நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: பாஜக அரசு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிர்வாக சீர்கேடு மற்றும் தவறான நிர்வாகம் குறித்து மோடி அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் (2004 – 2014) பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது குறித்த வெள்ளை அறிக்கையாக இது வெளியாகவுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது, அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக பல்வேறு … Read more

2029-ல் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்!!

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதிய அறிக்கை, 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தின் காரணமாக, 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும் பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பிடிக்கும். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது இடத்தில் இருந்தது. தற்போது … Read more

இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது இந்தியா!! 

உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவுக்குப் பின்னால் பிரிட்டன் பின்தங்கியுள்ளது, இது லண்டனில் உள்ள அரசாங்கத்திற்கு மேலும் ஒரு அடியை வழங்கியுள்ளது. சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து வீழ்ச்சியடைந்தது இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு பின்னணியாகும். 2021 இன் இறுதி மூன்று மாதங்களில் இந்தியா இங்கிலாந்தைக் பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த கணக்கீடு அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, முதல் காலாண்டில் இந்தியா அதன் முன்னிலையை … Read more

#BREAKING: ரெப்போ விகிதம் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு  என  ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4% ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய … Read more

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு – மத்திய அரசு

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை. நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து, தற்போது 7.79% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் … Read more

இரண்டாவது காலாண்டிலும் நாட்டில் பொருளாதாரம் மேலும் சரியும் – ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கியின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கூற முடியாது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். முதல்கட்ட … Read more

ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் – நாராயணசாமி

மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மிக பெரிய பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவைகள் கடனுதவி வழங்கி வருகிறது.  இந்நிலையில், … Read more

Warren Buffett யையும் விட்டுவைக்காத கொரோனா இதுவரை 50 பில்லியன் இழப்பு

கொரோனா சாமானியர் முதல் பெரும் பணக்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை .இதனால் உலகமுழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது . Warren Buffett ஒரு அமெரிக்க மிகப்பெரிய  முதலீட்டாளர், இவர் Berkshire Hathaway என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ( CEO ) உள்ளார். அவர் உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் 2019 டிசம்பர் நிலவரப்படி 88.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர், இவர்  உலகின் … Read more

தங்கத்தையும் விட்டுவைக்காத கொரோனா !

தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த பாதிப்பு தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தங்கத்தின் தேவை வெகு அளவு குறைந்துள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது. … Read more

கொரோனா எதிரொலி ! வீழ்ச்சியை சந்திக்க உள்ள உலக நாடுகள் -இந்தியாவின் நிலை என்ன?

கொரோனா காரணமாக  1930-ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம்  முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதனை சர்வதேச நிதியம் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-ஆம் ஆண்டில் 1.9  %  இருக்கும் என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.1930-ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் … Read more