இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு. இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் […]
இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கலாவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார். இலங்கை […]
இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை. அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.இதனால், உணவுப்பொருட்கள்,பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, ராஜபக்சே அரசை பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.இதனையடுத்து,அவர்களிடம் மரைன் […]
இலங்கை:பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மேலும்,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பிரதமர் பதவி விலகலா?: இதனால்,அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச […]
இலங்கையில் வடக்கு,தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூடுமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்துள்ளது. முழு ஊரடங்கு அமல்: இதன்காரணமாக,இலங்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.எனினும்,இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இலங்கையில் நேற்று மாலை […]
இலங்கை:அதிபர் ராஜபக்சே அரசுக்கு எதிராக குடிமக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்ட நிலையில்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. 36 மணி […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு காரணமாக அரிசி,சர்க்கரைஉள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுகின்றன. அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காரணமாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது.இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் இழப்பை அரசாங்கம் சந்தித்துள்ளது. உணவுபொருட்கள் விலை கடுமையாக உயர்வு: இதனால்,கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உணவு,மருந்து,பால் பவுடர், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு […]