முதலில் படேலை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி, தற்போது நேதாஜியை தேர்ந்தெடுத்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைந்து, பணக்காரர்களின் வருமானம் 33% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏழைகளின் வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கிராமப்புறங்களில் காண முடிகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகம் உள்ளது. […]