தகுதி இல்லாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் – கமல்ஹாசன்

தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமஹாசன், தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என்றும் ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டும் இருந்து செய்யும் விஷயமல்ல எனவும் பேசியுள்ளார்.