Tag: Ebrahim Raisi

ஈரான் அதிபர் மரணம் ! உலக அளவில் தங்கம், பெட்ரோல் விலை உயரும் அபாயம் ?

சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது. ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதிபரின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து கொண்டு வருகிறது. மேலும், சில உலகநாடுகளும் இந்த துக்கத்தில் பங்காற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் […]

#Iran 5 Min Read
Iran President , Ebrahim Raisi

அதிபர் மறைவு: ஈரானில் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?

சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியகியுள்ளது. அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்காலிக அதிபராக முகமது முக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், முதல் துணை ஜனாதிபதி பதவி […]

#Iran 3 Min Read
presidential election

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஒரு தரப்பு மக்கள்? என்ன காரணம்?

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 […]

#Iran 5 Min Read
Ebrahim Raisi

ஈரான் அதிபர் ரைசி மரணம்- இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

சென்னை : ஈரான் அதிபர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா […]

#Iran 3 Min Read
ebrahim raisi

ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட […]

#Iran 5 Min Read
Muhammad Mukhbar

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டனர் என அறிவிக்கப்பட்டது. ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நடைபெற்ற […]

#Iran 4 Min Read
Iran Prime minister Ebrahim raisi

ஹெலிகாப்டர் விபத்து : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு!

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உடல் மீட்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று வருகை தந்தனர். வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர்  […]

#Iran 5 Min Read
ebrahim raisi

இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்?

சென்னை: ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெரிய கேள்வி என்னவென்றால் ஈரானின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதுதான். ஒரு தகவலின்படி, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அரசியலமைப்பின்படி 50 நாள்களுக்குள் புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும். இதனால், முஹம்மது முக்பரின் […]

#Iran 3 Min Read
Mohammad Mukhbar

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சென்னை : ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர்  மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய […]

#Iran 4 Min Read
pm modi and Ebrahim Raisi

ஹெலிகாப்டர் விபத்து! ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!

சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் ரைசி மற்றும் அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஈரான் அதிபர் சென்ற இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதற்கட்டமாக தகவல்கள் கிடைத்துள்ளது. […]

#Iran 4 Min Read
ebrahim raisi helicopter