பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 […]
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் ஐந்து நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மியான்மர் இன்னும் மீளவில்லை, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது, காட்டங்கள் இடிபாடுகளில் சிக்கிய பலர் மாயமானதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. அதே நேரத்தில், மீட்புப் […]
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் (7.7, 6.4) கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஐந்து நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பெரிய பெரிய கட்டடங்கள் தரைமட்டமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேல் […]
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 59 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாண்டலே நகரில் மசூதி இடித்து விழுந்ததால், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. அந்த வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு […]
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் தலைநகரான நைபியிடாவிலிருந்து வடகிழக்கே அமைந்துள்ள சகாய்ங் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 12 நிமிட இடைவெளியில் மீண்டும் […]