அந்தமான் நிக்கோபார் அருகே அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கமானது முதலில் காலை 11 மணிக்கும் பின்பு தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.பிற்பகல் 3:02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 256 கிமீ தொலைவில் ஏற்பட்டது.இது கடலில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.