Tag: earth quake

Tsunami Warning : சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.  இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

earth quake 2 Min Read
Default Image

வேலூரில் 3வது முறையாக நில அதிர்வு – மக்கள் அச்சம்!

வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் […]

d shorts 2 Min Read
Default Image

மேகலயாவில் நிலநடுக்கம்.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் நடுக்கம்

மேகலயாவில் திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை  1.13 மணியளவில்  திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

earth quake 2 Min Read
Default Image

இமாச்சல் மற்றும் மணிப்பூரில் நிலநடுக்கம்… தேசிய நிலநடுக்க மையம் தகவல்…

இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று சரியாக அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. இதேபோல, மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோளில் 3.4 ஆக பதிவாகி உள்ளது எ.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

earth quake 2 Min Read
Default Image

ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்…. தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்…

நம் அண்டை நாடுகளான ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த அளவு  ரிக்டர் அளவுகோலில்  4.2 ஆக பதிவாகி உள்ளது. இதேபோல்  பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. […]

afkan 2 Min Read
Default Image

டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம்.! பொதுமக்கள் பதற்றம்.!

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், இன்று இரவு 9.20 மணிக்கு தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் […]

#Delhi 2 Min Read
Default Image

நில நடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்!

பேட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்.  உலகம் முழுவதும் கொரோனாவின்துக்கம் தாக்கம் நாளுக்கு நாள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் லட்சத்தை கடந்து பாதிப்புகள் சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில், நியூசிலாந்தில் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அறிவாகவும், துணிவாகவும் விரைந்து செயல்பட்ட நியூசிலாந்து பிரதமராகிய பெண்மணி ஜெசிந்தாவால் அந்நாட்டில் கொரோனா தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இதனால் […]

#Corona 3 Min Read
Default Image

நிலநடுக்கத்திலும் நேரலையை தொடர்ந்த நியூஸிலாந்து பிரதமர்..!

நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார். நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன […]

earth quake 4 Min Read
Default Image

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி !

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.  இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 117 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டதாக கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருப்பதாக இ.எம்.எஸ்.சி கூறியுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கிசார் தீவிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் சுனாமி வர […]

earth quake 2 Min Read
Default Image

டெல்லியில் 2-வது நாளாக இன்றும் நில அதிர்வு .!

டெல்லியில் நேற்று மாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.  இந்த நடுக்கம் வடகிழக்கு டெல்லியை மையம் கொண்டிருந்தது.இதனால் மக்கள் பயந்து வெளியே ஓடி வந்தனர். டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நேற்று நில நடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2-வது நாளாக  டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக […]

coronavirus 2 Min Read
Default Image

இந்தோனிசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சென்றாண்டு போல நிகழுமோ என மக்கள் பீதி!

இந்தோனிசியாவில் இன்று நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவு என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் ஏற்பட்ட சேதத்தை இன்னும் கணக்கிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், மாலுகு மாகாணத்தில் உணரப்பட்டுள்ளது. இதே போல சென்றாண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாக இருந்தது. இதனை தொடர்ந்து வந்த சுனாமியால் 4,300 பேர் இறந்துவிட்டனர். அதே நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என மக்ககள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை 8.46க்கு ஏற்பட்ட […]

#Indonesia 2 Min Read
Default Image

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கம்..! 68 பேர் காயம்!

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், […]

Albenia 2 Min Read
Default Image

ஐயோ எங்க தீவை காணோம்!! கதறும் பாகிஸ்தான் மக்கள்

தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர். பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது. இந்த படங்களை செயற்கைகோள் மூலம் நாசா வெளியிட்டது. 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 825 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் ரிக்டர் அளவு 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கதால் கடலுக்கு அடியில் டெக்டோனிக் தட்டு […]

#Pakistan 2 Min Read
Default Image

மரண பீதியில் இந்தோனேஷியா….மீண்டும் நிலநடுக்கம்…!!

இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு மாதரம் பகுதியில் இன்றும்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.

earth quake 2 Min Read
Default Image

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க […]

america 3 Min Read
Default Image

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்….விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

இமயமலைப் பகுதியில் சுமார் 8 புள்ளி 5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் மற்றும் டெல்லி தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக இமயமலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

earth quake 2 Min Read
Default Image

750 பேர் காயம்…ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்…மக்கள் பீதி…!!

ஈரான் நாட்டின் தெற்கில் எகிப்து நாட்டின் எல்லையை அருகே  அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 என்ற புள்ளிகளில் பதிவானது.இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் இருக்கும் நகரங்களையும் , கிராமங்களையும்  கடுமையாக உலுக்கியது.இதனால்  வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின.நிலநடுக்க அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகள் , கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் வீடுகள் இடிந்து […]

earth quake 3 Min Read
Default Image

நியூசிலாந்தில் நிலநடுக்கம்….!!

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தில் உள்ள டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.  இந்த நிலநடுக்கம் தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு […]

earth quake 3 Min Read
Default Image

அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்…நடுங்கும் கனடா…!!

கனடாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்நாட்டில் வாங்கூவர் தீவில் கனடா நேரப்படி திங்களன்று காலை 10.39 மணிக்கு முதலில் 6.6 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரை மணி நேரத்துக்குள் இரண்டாவது முறையாக 6.8 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 122 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டது. பின்னர் 6.5 மற்றும் 4.9 என்ற ரிக்டர் அளவுக்கும் வாங்கூவரின் […]

#Canada 2 Min Read
Default Image

இந்தோனேசியா சுனாமி தாக்குதல் ..! 1,763 பலி…! 5,000 பேர் மாயம் …!

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,763 ஆக  உயர்ந்துள்ளது . இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி  தீவில் ரிக்டர் அளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்.  இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு […]

america 4 Min Read
Default Image