பிளாக்ஹோலின் தீவிர வெடிப்பு ..!! பூமியை நோக்கி வந்த மர்மம்..!!

பூமியை நோக்கி வந்த மர்மமான ஒளியானது ப்ளாக்ஹோலின் தீவிர வெடிப்பிலிருந்து வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளில் உருவாகியுள்ள ப்ளாக்ஹோல் தனக்கு அருகில் வரும் நட்சத்திரங்களை உட்கொள்ளும்பொழுது ஏற்பட்ட தீவிர வெடிப்பால் இந்த ஒளியானது ஏற்பட்டது எனவும் இது நேரடியாக பூமியை நோக்கி வந்தது என்றும் வானியல் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். நட்சத்திரங்களானது ப்ளாக்ஹோலால் சிறு துண்டுகளாக உடைக்கப்படும் நிகழ்வானது TDE அல்லது டைடெல் சீர்குலைவு என்று அழைக்கப்படும். மேலும் இதுபோன்று நடக்கும் சில நிகழ்வுகளில் 1 சதவீத … Read more

பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம்! மிகக் குறுகிய நாளாக பதிவு

ஜூலை 26, 2022 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது. IERS இன் தகவல்படி, ஜூலை 26 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்ததாக நேற்று தெரிவித்தது. கடந்த மாதம் ஜூன் 29 அன்று 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகள் குறைவாக இருந்த நேரத்தில் பூமி தனது முழு சுழற்சியை நிறைவு செய்தது. இதைத்தொடர்ந்து ஜூலை 26 அன்று நாள் 24 மணிநேரத்தை … Read more

இன்று அல்லது நாளை பூமியைத் தாக்கும் புவி காந்த புயல் – விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு!

கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) இன்று பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு. பயங்கரமான புவி காந்த புயல் (Massive Geomagnetic Storm) G2 (மிதமான) மற்றும் G1 (மைனர்) 48 மணி நேரத்திற்குள் அதாவது இன்று அல்லது நாளைக்குள் பூமியைத் தாக்கலாம் என்றும் இதனால் உலகளாவிய இருட்டடிப்பு ஏற்படலாம் எனவும் நாசா உள்ளிட்ட உலகளவில் உள்ள விண்வெளி நிறுவனங்கள் கணித்துள்ளது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) மற்றும் நேஷனல் ஓசியானிக் … Read more

இன்று பூமியை நோக்கி வரும் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு பெரிய கோள்!

அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் … Read more

முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற 4 அமெரிக்கர்கள் – ஸ்பேஸ்எக்ஸ் சாதனை..! …!

முதல் முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் 4 பேரை  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4பேர் கொண்ட … Read more

இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வருகிறது…!

இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வரவுள்ளது, நாடு முழுவதுமுள்ள மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை காணலாம். சூரிய குடும்பத்தின் 8 கோள்களில் ஒன்றான சனிக்கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. எனவே இன்றிரவு சனிக்கோளை நாம் காண முடியும் என வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று காலை 11:30 மணி முதலே சனிக்கோள் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் அவர்கள் … Read more

ராட்சத விண்கல்லால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இதுவரை பூமியை 11 லட்ச விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விண்கற்களின் அளவு பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாக இருக்கக்கூடும். இந்த விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும். சில விண்கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளது. பெரும்பாலும், பூமி மீது விழும் விண்கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமியை நோக்கி வரும்பொழுது காற்று உராய்வு காரணமாக … Read more

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்;இன்று பூமியில் விழும் அபாயம்..!

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பி வந்துக்கொண்டிருக்கும் சீன ராக்கெட் இன்று பூமியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, ‘தியான்காங்’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.இதற்காக சீனா,ஒரு மிகப்பெரிய விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி “லாங் மார்ச் 5 பி” என்ற 110 அடி உயரமுள்ள ராக்கெட் உடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பியது. இந்நிலையில்,விண்வெளியின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட ராக்கெட்  தற்போது கட்டுப்பாட்டினை இழந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிகிறது. … Read more

1969-ல் பூமியில் விழுந்த விண்கல்..சூரிய மண்டலத்தின் வரலாறை கூறும் புதிய ஆராய்ச்சி.!

1969-இல் பூமியில் விழுந்த விண்கல் காந்தத்தின் உதவியுடன் சூரிய மண்டலத்தின் வரலாற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சூரிய குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் பற்றியும், பூமி போன்ற சில கிரகங்கள் ஏன் வாழ்விடமாக மாறியது மற்றும் உயிருக்கு உகந்த நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதையும் பற்றி விஞ்ஞானிகள் அறிய உதவும் தகவல்களை காந்தத்தின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், … Read more

பூமியை தாக்கவுள்ள சிறுகோள் – 2068 பூமியின் முடிவா?

2068 ஆம் ஆண்டு பூமியை ஒரு சிறுகோள் தாக்கவுள்ளதால் அது பூமியின் முடிவாக இருக்குமோ என பலராலும் எண்ணப்படுகிறது.  மூன்று கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட அதாவது 300 மீட்டர் அளவை கொண்ட அப்போபிஸ் எனும் சிறுகோள் ஒன்றின் சுற்றுவட்ட பாதையில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் அது 2068 ஆம் ஆண்டு பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தலாம் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு காஸ் ஆஃப் கேயஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். முன்னதாகவே 2029 இல் இந்த கோள் … Read more