Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத வகையில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை தடுக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கில் ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஊட்டி கொடைக்கானல் வருவோர் , கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டது போல, […]
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஏற்கனவே ஜூன் 14-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று […]
தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி. தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், […]
இன்று முதல் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இ பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கூடிய […]
தமிழகத்தில் நாளை முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த ‘இ-பதிவு’ பெற எப்படி விண்ணப்பிப்பது? என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 […]
தமிழகத்தில் மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளை கடுமையாக்க வேண்டும் என நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் முறை […]
இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் […]
மாநிலங்களுக்கு இடையே இனி இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே சரக்கு உள்ளிட்ட போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இதற்காக எவ்வித […]
இ-பாஸ் நடைமுறையை மலைப்பகுதிகளில் தொடரலாமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து வந்தது. அதில் ஒன்றாக போக்குவரத்துகளை அனுமதித்தது. அத்துடன் வெளி மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டரிடம் இ பாஸ் அனுமதி பெற்று வெளியில் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் […]
கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு மக்களின் நிலை கருதி சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கடந்த மாதமே இயக்கப்பட்டது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ பாஸ் இல்லாமல் […]
நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை தமிழகத்தில் அண்மையில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் முக்கியமானதாக மாவட்டங்களுக்கிடையே செல்ல இ-பாஸ் கட்டாயமில்லை என்பதை அறிவித்தார். மாநில அரசு அறிவித்தாலும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிலைமையை பொறுத்தே மாநில அரசு உத்தரவுகளை அமல்படுத்தும். அந்த வகையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் […]
ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற […]
வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படும். சமீபத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். கொரோனா உள்ளவர்களை அடையாளம் காணவே இந்த இ – பாஸ் முறை என கூறினார். இந்நிலையில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படும், மேலும் அவர் 72 மணி நேரத்தில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் உள்ளே வர தடை இல்லை என புதுவை அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருப்பினும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் முறையில் அனுமதி வாங்கி தான் செல்ல முடியும். இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை மத்திய […]
தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார் சென்னை, திருவிக நகரில் கொரோனா பரிசோதனை மையத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து, அங்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு செய்த பின், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்து இன்னும் […]
இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் எனஎம்.பி காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. திருமணம், இறப்பு மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக […]
பொதுமுடக்கம்: நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு: ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்பொழுது 3-ம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் வரும். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி. மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை இ-பாஸ் […]
ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர். ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேசமயத்தில், ரஜினி இ பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். இதன்காரணமாக, சென்னை […]
போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும். – சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை.! கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு இம்மாத இறுதி வரையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த […]