சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]