மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10,000 பணியிடங்கள் நிரப்படும் என்றும் கூறியுள்ளார். […]