சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) தசார விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது, தனது தாத்தாவுடன் அங்கு நடைபெற்ற தசார விழாவைக் காணச் சென்ற மூன்று வயது சிறுமியை 40 வயதான ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கவர்தா சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமிக்கு தாகம் எடுத்ததால், அருகில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி […]
தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும். இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் […]
நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.. 8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்! மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று பொதுவானதாக இல்லாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை […]
விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவன் இவன் படத்தினை தொடர்ந்து விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “எனிமி“. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]
வடமாநிலங்களில் முக்கிய பண்டிகையான கங்கா தசராவில் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடமும், இந்த வருடமும் பல கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் […]
குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாகவும்,தசராவாகவும்,மகாநவமியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டு மக்களுக்கு தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தசரா வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த திருவிழா சத்தியத்தின் வெற்றியையும், அநீதியின் மீதான பொய்யையும் குறிக்கிறது. தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து […]
வட மாநிலங்களில் பத்து நாட்கள் தசரா பண்டிகை நடைபெறும்.இந்த பண்டிகையின் பொது இடங்களில் துர்க்கை அம்மன் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தசரா பண்டிகை முடிவடைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைகளை ஆறுகள் மற்றும் குளங்களில் கரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது ராஜஸ்தான் தோல்பூர் பகுதியில் ஒரு துர்க்கை அம்மன் சிலையை அங்கு உள்ள பர்பதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆற்றில் குதித்த ஒரு சிறுவன் […]