பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் துர்கா நவமி அன்று பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததுள்ளனர் என்றும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜா தள துர்கா பூஜை ‘மகா நவமி’ கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். […]
சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறியவர் சோனு சூட். ஆம், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழில்களுக்கு முன் நின்று உதவியதுடன் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளார் . அதற்காக, பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சோனு சூட் செய்த உதவிகள் அனைத்தையும் சிலையாக வடிவமைத்து துர்கா பூஜா குழுவினர் சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.