சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கு பொருள்படும் பழைய பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனை அடுத்து தனது பேச்சின் தாக்கம் உணர்ந்த அமைச்சர் துரைமுருகன், தனது பேச்சு கருத்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது பேச்சின் தன்மை அறிந்து நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் […]