தமிழகத்தில் தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள துரைக்கண்ணுவிற்கு கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளது. எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் துரைக்கண்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிசான் திட்ட முறைகேட்டில் “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் […]