மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ரன்வீர் சிங், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைத்தார். உடனடியாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த தமிழ் நாகரிங்ககளின் சிறப்பு. துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன. அந்தவகையில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் […]
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசு பயணமாக நேற்று துபாய் சென்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்துள்ளார். இந்த நிலையில், உலக வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன், ஆலோசனை நடத்தி வருகிறார். ஐக்கிய அரபு […]