சென்னை : பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி குடிசை மாற்றுவாரிய கட்டடப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். […]