சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை. இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா […]
மகாராஷ்டிரா : புனேயில் உள்ள ஒரு பிரபல மாலின் கழிவறையில் இரண்டு இளம்பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அமைந்திருக்கும் மாலில் இரண்டு இளம் பெண்கள் போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், போதைப்பொருளை உட்கொண்ட அந்த இரு பெண்களை, மாலில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் வெளிப்படையாக படம் பிடித்துள்ளார். அதனை கவனித்த பெண்கள் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கேட்க, […]
பஞ்சாப் : சமீபகாலமாக பஞ்சாபில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அமிர்தசரஸில் ஒரு பெண் நடுரோட்டில் போதையில் சுயநினைவை இழந்து நின்று கொண்டு இருந்த அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, பஞ்சாபில் கிட்டத்தட்ட 35% குடும்பங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பிரச்சினை நீண்டகாலமாக பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை […]
DMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது […]
Jaffer Sadiq : ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் அரசியல் சார்ந்தவரும், சினிமா திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். Read More – பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி […]
அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் கடத்துபர்களை கண்டறிந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், வங்கி கணக்குகளை முடக்கியும், போதைப்பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், […]
உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கப்பட்ட சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். இந்தியாவில் மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு அந்நிறுவனத்தின் மருந்து காரணமானதால் பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவுறுத்தியிருந்தது. இந்த மருந்துகள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு […]
டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் […]
தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாட்டு. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள […]
குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன என அமச்சர் பொன்முடி குற்றசாட்டு. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று […]
போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி நியமிக்கப்படுவார். வெளி […]
உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக்த்தில் கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்து வருவதை நாம் தினமும் செய்திகள் வாயிலாக பார்த்து வருகிறோம் . அதே போல, அதனை தடுக்க அரசு, காவல்துறையினர் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, அன்மையில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா விற்று வந்த சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளனர். திருப்பூர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க,போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக, அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.அதன்படி,பள்ளி ஆசிரியர்,மாணவர்,பெற்றோரை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து,தொடர்ச்சியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.மேலும்,மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்களா? என்ற அறிகுறிகளை கண்டறியும் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். அதன்பின்னர்,அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு […]
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது. பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் நேற்று இரவு பெங்களூரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹோட்டலில் நடந்த விருந்தில் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. […]
டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரூ.100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்கள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (என்சிபி) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக,NCB இன் டைரக்டர் ஜெனரல் SN பிரதான் கூறுகையில், “நார்கோ-டெரரிசத்துக்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. இந்த நெட்வொர்க் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே போதை-பயங்கரவாதத் […]
போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி […]
மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் […]
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் […]
குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா தனியார் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயினை அகமதாபாத் மண்டலத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மூலம் துறைமுகத்தில் சோதனை செய்ததில் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக […]