சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். தற்போது, போதையில்லா தமிழ்நாடு என்ற தமிழக அரசின் நோக்கத்தை செல்போன் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “போதையில்லா தமிழ்நாடு” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ், […]