சென்னை: மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க அம்பத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள்களை கடத்தி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சமீபத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில், துக்ளக் உள்ளிட்ட 4 பேர் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், இன்று மன்சூர் அலிகான் மகன் […]
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர். போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் […]
ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள பூங்கா அருகே காரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, அவரது மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தென் கொரியாவில் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ளன, அந்நாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினால், ஆறு […]
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு. வடமேற்கு மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் பயணித்த பிளாக் ஹாக் என்ற ராணுவ ஹெலிகாப்டர் சினாலோவாவின் லாஸ் மோச்சிஸ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை என்றும் விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்த அன்று […]
அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது. இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு […]
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு புதிய ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம் – ரோச் மற்றும் சிப்ளா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது, இதனை சரிசெய்யும் விதமாக இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்காக ட்ரக் (போதைப் பொருள்) ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது திங்களன்று போதைப்பொருள் மருந்து விற்பனையில் முன்னனி நிறுவனமான ரோச் மற்றும் சிப்ளா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்தது தொடர்பாக பாலிவுட் திரையுலகில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் திரையுலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பல பாலிவுட் நடிகர்கள் இடமும் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். அதில் பலர் […]
டெல்லியில் போதைப்பொருள் விற்ற இரண்டு நேபாள நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில், குர்கான் மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாகவும், இவர்கள் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் டெல்லி குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் போதைப்பொருள் சாம்பலை செய்த நீரஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நேபாள நாட்டினரை கைது செய்துள்ளனர். இவர்களது வாடகை வீட்டில் இருந்து, பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் […]
போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால், புதிய காவல் நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் பலர் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில் அதிக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படக்கூடிய இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டர் […]
பெங்களூருவில் MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.டி.எம்.ஏ எனும் போதைப்பொருள் மிக விலையுயர்ந்தது, அதே சமயம் தடை செய்யப்பட்ட போதை பொருள். இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்கள் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எம்.டி.எம்.ஏ எனும் போதை பொருளை வாங்கியுள்ளனர். இவர்கள் நால்வரும் வாங்கியது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களிடமும் விற்பனை செய்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அந்த 4 மாணவர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 750 எம்.டி.எம்.ஏ […]
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை. கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். தன் மகன் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு […]
பிரபல பாஜக பிரமுகர் கைது. பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அடைக்கலராஜ் மற்றும் கூட்டாளிகள் ஜெயபிரகாசம், சித்த மருத்துவர் மோகன்பாபு, பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அபினையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆன்டிவைரல் மருந்து ஃபாவிபிராவிர் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு மாத்திரைக்கு ரூ .63 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலில் (டி.சி.ஜி.ஐ) மருந்து நிறுவனமான ஹெட்டெரோ இன்று மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் . இன்று இந்தியாவில் 63 ரூபாய்க்கு மாத்திரை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் மிதமான நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சையளிக்க ஃபாவிபிராவிர் தயாரிக்க பி.டி.ஆர் பார்மா இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் பெற்றுள்ளது. கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் […]
நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது. இந்த போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்திலே இருந்து பாதுகாப்பு மற்றும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வந்தனர்.இதை தொடர்ந்து உளவுத்துறை சுதந்திர தினத்திற்கு முன்பாக இந்தியாவில் அதிக அளவில் போதை பொருட்கள் ஊடுருவ உள்ளதாக தகவல் கொடுத்தனர். அதன் படி போதை தடுப்பு அதிகாரிகள் முழு வீச்சில் தீவிர சோதனைகள் நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் 13.25 கிலோ ஓபியம் ,2.09 கிலோ கொக்கைன் 13.25 கிலோ கஞ்சா போன்ற போதை பொருட்கள் சோதனையில் […]
2017ம் ஆண்டில் சென்னை நகரில் நடத்தப்பட்ட தேடல்களின் போது 22,575 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 748 கிலோ கஞ்சா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கஞ்சா,குத்கா மற்றும் பல தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதனால், அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ், சென்னை காவல்துறை சிறப்பு குழுக்களை அமைத்தது. ஜனவரி- 1, 2017 முதல் டிசம்பர்-31, 2017 வரை நடத்தப்பட்ட தேடலில் மொத்தம் 3039 வழக்குகளும் 3281 நபர்களை கைதும் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த குற்றங்களுக்கு தொடர்பு உள்ள நபர்களும் குண்டர்கள் சட்டத்தின் […]