கொரோனா வைரசுக்கு நாசல் தடுப்பூசி (nasal vaccine) குறித்த சாத்தியக் கூறுகளை பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றில் பேசிய பாரத் பயோடெக் எம்.டி டாக்டர் கிருஷ்ணா எலா, கொரோனா தடுப்பூசிகள் நுரையீரல் கீழ்ப்பகுதி மட்டுமே பாதுகாக்கின்றனர். நுரையீரலின் மேற்பகுதி மற்றும் மூக்கு பாதுகாக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். ஆனால், அந்த தடுப்பூசி மூலம் தீவிர நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். […]