சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை […]
பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாய் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை. ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. இதனால் மா.போ.கழக […]