பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் உள்ள தனியார் பள்ளி வேன் 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சோமந்துரை சித்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் உடுமலை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வேன், பள்ளி வாகனம் மீது மோதியது. இதில், பள்ளி வாகனத்தில் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த 5 வயது மாணவனின் வலது கை துண்டானது. மேலும் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் படுகாயம் அடைந்தான். பின்னர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வேனை போலீசார் வளைத்து பிடித்தனர். […]