“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை ‘நாகரீகமற்றவர்கள்’ என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியவுடன், சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் “நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த […]