தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அதனை தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் […]
நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமுமில்லை என்றும் தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி வழங்கி உள்ளோம் எனவும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதில் அளித்திருந்தார். அமைச்சர் கூறியாதவது, தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு […]
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு, புதுமண தம்பதியினரை வாழ்த்தினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. 1967ல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. 1967க்கு முன் சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது, சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி என்றார். திமுகவில் […]