திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்பி சிங் ஆகியோர் அடங்கிய குழு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திரு ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தொடரில் இருந்து பொறுப்பேற்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும், டிராவிட் தான் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 உலக கோப்பை முதன் முதலாக 2007ஆம் ஆண்டு நடைபெற்றபோது, இந்திய அணியானது மூத்த வீரர்களை தவிர்த்து இளம் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை கொண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று அசத்தியது. அதுவும், அப்போதைய பலம் வாய்ந்த […]