டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]