வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ. 18,090 கோடி கடன் வசதியை வழங்கியிருக்கும் மத்திய அரசு. ஈழத்தமிழர்கள் சிக்கலை விரைந்து தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள மத்திய அரசு,அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான […]
அண்ணாமலை பல்கலை.பேராசிரியர்களுக்கு ஏழாவது குழு ஊதியத்தை வழங்க சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு தான் அதன் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றால் அது எந்தக் காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றும்,இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்,அதற்குத் தேவைப்படும் […]
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும்,மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும்,மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை […]
பொட்டாஷ் விலை உயர்வு,தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிப்பதாகவும்,அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும் பழைய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது […]
தமிழக வனத்துறையினர் சிறைபிடிப்புக்கு காரணமான பாலக்காடு ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக பாலக்காடு சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை அங்குள்ள தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது. இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி […]
இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் […]
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்காலம் என்ற யோசனையை பா.மா.க.தலைவர் ராமதாஸ் முன்வைத்துள்ளார். தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து,அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பா.மா.க.தலைவர் ராமதாஸ் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்,”மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கு முக்கிய காரணம் அது மிகப்பெரிய நிலபரப்பைக் கொண்டுள்ளது.ஆகவே,மேற்கு வங்கத்தை 3 […]
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும்போது “புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.