என்னுடடைய நியமனம் தகுதிகளின் அடிப்படையிலே நடைபெற்றது என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று சென்னை திநகரில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று […]