மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன். திமுகவில் இணையவுள்ளதாகவும்,அதற்காக இன்று அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியும் போட்டியிட்டது.ஆனால்,மக்கள் நீதி மய்யம் கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.மேலும், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், குமரவேல், மவுரியா,சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்ட பல […]