தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக செலுத்திய சமூகநீதிப் போராளி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்றாலே இந்தியா முழுவதும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பினர் […]
அரியலூர் மாவட்டத்தில் அனிதா நினைவாக புது நூலகம் இன்று திறக்கப்படவுள்ளது. நீட் தேர்வின் காரணமாக தனது மருத்துவ கனவையும்,வாழ்க்கையையும் இழந்த மாணவி அனிதா நினைவாக அவரின் அரியாலுர் மாவட்டத்தில் நினைவு புதுநூலகம் தயாராகி வந்த நிலையில் அந்த நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. அறியாதவர்கள் இல்லை அரியலூர் மாணவி அனிதாவை….! அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். […]
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள நிலையில் சமூகத்தில் வரும் ஏற்படும் நிலைகளை அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக பிசியாக இருக்கிறார். இவர் கதிராமங்கலம்,ஜல்லிக்கட்டு ,ஒகி புயல் என பல புரட்சிகளில் அவரின் குரல் ஒலித்தது. அதே நேரத்தில் டாக்டர் அனிதாவின் விசயத்தில் குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது இன்று அனிதாவின் 18வது பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டரில் டாக்டர் அனிதாவிற்கு பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று […]