உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டவர் சதாசிவம்-குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில்,பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது . உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டவர் சதாசிவம் என்று பேசினார்.