தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.! அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு […]
மதுரையில் பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், அண்ணல் அம்பெத்கர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில், தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான லோகோ-வை வெளியிட்டு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அடுத்ததாக, […]
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்கனவே, […]
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் […]