முந்தைய காலகட்டத்தில், தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்தில், புறாவை ஒரு தூது பறவையாக பயன்படுத்தினர். ஆனால், இன்று அதே புறாவையே குற்ற செயல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் ஆறறிவு படைத்த மனிதர். இந்நிலையில், பிரேசில் நாட்டில், புறா ஒன்று சிறை சாலைக்குள் போதை பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளது. கடத்தல்காரர்கள், புறா மூலம் ரகசிய தகவல்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். இந்த செயலை தடுப்பதற்காக சிறை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]