கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த […]