சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள் அருண் குமார் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், […]