அட்லாண்டிக் கடல்ப்பகுதியில் பாரம்பரிய திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவுகள் சுமார் 50,000 மக்கள் தொகை கொண்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ள பரோயே தீவுக்கூட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 1,400 க்கும் மேற்பட்ட வெள்ளை டால்பின்களை கொன்றுள்ள நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவில் டால்பின்களை கொன்றுள்ளனர். மேலும், டால்பின்கள் இறந்த அந்த கடல் பகுதி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. […]
இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் அங்குள்ள மக்கள் கடலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் வழி தவறுவதாலோ அல்லது கடலில் ஏற்படக்கூடிய மாறுபட்ட சூழ்நிலை காரணமாகவோ கரை ஒதுங்குவது அல்லது இறந்து கூட்டமாக கடல் நீரால் அடித்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பு கடற்கரையில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. உயிருடன் கரை ஒதுங்கியதால் மக்கள் […]
மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு. வகான்ஷியோ கப்பலில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெயை கசிந்து வருவதால், மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டிருந்தது. டன் கணக்கிலான எண்ணெய் கடலுடன் கலந்தாலும், தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்குப் பிறகு 39 டால்பின்கள், 3 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.