தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல். தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அங்கு 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதுபோன்று சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 8 மாவட்டங்களில் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவு […]