இனி மருந்து சீட்டில் ‘Capital’ எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்.! சுகாதாரத்துறை திடீர் உத்தரவு.!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக Capital Letters-இல் (பெரிய எழுத்தில்) தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்துச்சீட்டில் இருக்கும் எழுத்துக்கள் புரியாத வகையில் இருப்பதாக பல … Read more

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!

dogbite

சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து  இந்த நாய் கடித்த 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது. இதனையடுத்து, அந்த நாயை மருத்துவர்கள் … Read more

இனி டாக்டர்களின் புரியாத கையெழுத்தும் புரிந்துவிடும்.! கூகுளின் அசத்தல் சம்பவம்.!

மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி, தற்போது புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கையெழுத்து என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். அகில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதே தெரியாமல் மருந்து கடைக்காரரிடம் கொடுத்து இருப்போம். அவர்கள் அதனை பார்த்து மருந்துகள் கொடுப்பார்கள். … Read more

அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் ஏற்க தகுந்ததல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார … Read more

இன்று தொடங்குகிறது மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு!

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மருத்துவக் … Read more

மனித கண்ணில் இருந்த ஒரு டஜன் லார்வாக்கள்…, அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ போன்ற ஒன்று நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் ஈக்களின் லார்வாக்கள் டஜன் கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர்கள் உடனடியாக அவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இவ்வாறு கண்ணுக்குள் லார்வாக்கள் உருவாகத் தொடங்கி விட்டால் ஏற்படும் கண் எரிச்சல் … Read more

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்…! எக்ஸ்ரேயில் கண்டுபிடித்த மருத்துவர்கள்…!

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்.  மத்திய பெங்களூருவின் எம்டி தெருவில், விஜய் என்ற நபர் ஹேமா என்ற பெண்ணின் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்பெண்  70 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கச் சங்கிலியை அணிந்திருந்தார். அவர் இரவு 8:30 மணியளவில் மூன்று ஆண்களால் வழிமறிக்கப்பட்டார். அதில் விஜய் என்ற நபர் ஹேமாவின் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அவள் அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். அந்த நபரின் தாக்குதலுக்குப் பின் அவர் … Read more

மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு : அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் துணி!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் மருத்துவர்களின் கவனக்குறைவால் துணி இருந்ததால் பெண் உயிரிழப்பு. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது கணவர் அழைத்துச் சென்று வயிற்றுவலி குறித்து கூறிய போது பெண்ணின் … Read more

தலைவலியில் இத்தனை வகைகள் உள்ளதா? அறிகுறிகள் அறியலாம் வாருங்கள்…!

தலைவலி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வியாதி தான். பலரும் இதை எதிர் கொண்டு இருப்போம். திடீரென்று தலை வலிக்க தொடங்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு குழப்பமான மனநிலை ஏற்படும். இந்த தலைவலியில் பத்துக்கும் மேற்பட்ட வகை தலைவலிகள் இருக்கிறதாம். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஒருமுறையாவது இந்த தலைவலியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுதும் நாம் அனுபவிக்கக் கூடிய தலைவலி எந்த … Read more

காயமடைந்து தையல் போட மறுத்த சிறுவனுக்கு வலிநிவாரணியாக மாறிய விஜய் நடித்த “பிகில்” படம்..!

சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் ஷிவர்ஷன். இவனுடைய வயது 10.  இந்த சிறுவன் கடந்த 6 ஆம் தேதியன்று பற்றுலா சாலை வழியாக தனது உறவினர் அரவிந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவர்ஷன் திடீரென கீழே விழ மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. … Read more