கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு. ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் அர்ச்சனா, கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கிராம நிர்வாக […]
உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும், 1,400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோயினால், பல சாதாரண மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மக்களுக்கு மருத்துவம் பார்க்கும், மருத்துவர்கள் கூட இந்த நோயாளிகளுக்காக மருத்துவம் பார்த்து, தங்களது உயிரை […]
இந்தியாவில் கொரோனா வைரசால் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஒருவர் […]
சீனாவின் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கடந்த நாட்களாக கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 50 நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. அதுமட்டுமில்லாமல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் […]